உழவர் திருநாள்

ஏர் பிடிக்க ஆள் இல்லையென்றால்
வாழ்க்கை தேர் நகர வழியில்லை!
உழவனின் கைகளில் தான் நம்
நாடே நடை போடுகிறது!
உலகமே உழவனால் தான் வாழ்கிறது!
வரப்பினில் அவன் கால்கள் சகதியில்!
காலமெல்லாம் அவன் ஏர் பிடித்து
நம்மை சொர்க்கம் என்னும் தேரினில்
உலவ கண்டு களிக்கிறான்!
உழைப்பை தவிர வேறு ஒன்றும்
நாடாதவன்!
நிலம், நீர், காற்று, சூரியன் மற்றும் ஆகாயம்
இவர்கள் தான் அவன் தோழர்கள்!
இயற்கை தாயின் செல்ல பிள்ளை!
வள்ளுவன் சொன்னது போலே
ஏரின்றி ஏது உலகம்!
உழவருக்கு நன்றி சொல்வோம்!
அவர் வாழ்வுக்கு வேண்டியதை கொடுப்போம்!
உழவன் வாழ்தல் கண்டு நாடு பெருமிதம் கொள்ளும்!
அன்று இயற்கை தாய் நம்மையும் வாழ்த்துவாள்!

எழுதியவர் : sai (16-Jan-15, 6:19 pm)
Tanglish : uzhavar thirunaal
பார்வை : 121

மேலே