முதல் வணக்கம்

ஈரைந்து மாதமெனை
ஏந்திப் புறமெடுத்து - அமுது
ஊட்டி மடியமர்த்தியென்
நாவினில் சுடர் வளர்த்த அன்னையே போற்றி

உண்ணக்கொடுத்து உடைகொடுத்து
உறைவிடமும் தான் கொடுத்து
முன் எழுத்தையும் கொடுத்து - என்
முகவரியை வடிவமைத்த அண்ணலே போற்றி

ஏடெடுத்து எழுத்தாணிக் கைப்பிடித்து
எண்ணெழுத்துக் கண்ணிரண்டை எனக்களித்து
முன்னோர் உரைத்த மூதுரைத் தொகுத்து
என்னுள் பதித்த ஏந்தலே போற்றி

வித்தாகி வேராகி வேருக்கும் நீராகி
கிளையிலையாய்க் காய்கனியாய்
திருநாட்டைத் தழைக்க வைத்த
தந்தையர் நெஞ்சே போற்றி

அயராது உயிர் விதைத்து அருஞ்செயல் ஆற்றிடும்
ஐம்பூத அரசே போற்றி
அண்ட சராசர ஆதார விந்தமே
ஆதவா போற்றி போற்றி

- நரியனுர் ரங்கு - 9442090468

எழுதியவர் : நரியனுர் ரங்கநாதன் (17-Jan-15, 2:25 pm)
Tanglish : muthal vaNakkam
பார்வை : 157

மேலே