அறுபதுகாணும் இக்குழந்தையை வாழ்த்துங்கள் கேட்டை
பத்து வயதினிலே குறும்பின்
சிகரத்தை நான் தொட்டேன்
இன்று அறுபதுவயதினிலே குறும்போடு
பிறர்மனம்நோகா நகைச்சுவை உணர்வுகொண்டேன்
இருபது வயதினிலே கனவுலகில்
நாளும் திளைத்திருந்தேன்
இன்று அறுபதுவயதினிலே கனவுமேகங்கள்
கலைந்திட கண்டு ரசித்தேன்
முப்பது வயதினிலே எண்ணத்தில்
கோட்டை கட்டி மகிழ்ந்தேன்
இன்று அறுபதுவயதினிலே கட்டிய
குடிலை காத்திடத் துடித்தேன்
நாற்பது வயதினிலே உலகை
சுற்றிவரத் திட்டமிட்டேன்
இன்று அறுபதுவயதினிலே சுற்றிவரும்
பிரச்சனைகளை கண்டு மலைத்தேன்
ஐம்பது வயதினிலே உலைகை ஆளும்
வாய்ப்பை எண்ணி உவந்தேன்
இன்று அறுபதுவயதினிலே என்தலை
உருளும் நிலைஎண்ணி உருகினேன்
அறுபது வயதினிலே சாதனை
பலபுரிவேன் எனஎண்ணி பூரித்தேன்
இன்று அறுபது வயதினிலே மீண்டும்
இருபதுபோல் கனவுலகில் புகுந்துவிட்டேன்
நல்உள்ளம் கொண்ட நெஞ்சங்களே
இனியேனும் கனவுகள் கலையாதிருக்க
இன்று அறுபதுகாணும் இக்குழந்தையை
வாழ்த்துங்கள் தொடரட்டும் இப்பயணம்