காகிதமும் காதல் கொள்ளும் - நாயகி அவள் என்றால்

உன் முகம் பார்த்த நொடி ..
கவிதை ஒன்று வடிக்க ,
கைகள் ஏங்கி துடிக்க ..
எடுத்தேன் ஒரு எழுதுகோலையும் ,
வெள்ளை காகிதத்தையும் ..
உன் பெயரில் ஆரம்பிக்க எண்ணியே ,
காகிதத்தில் உன் பெயர் எழுத ..
முரட்டு காகிதம் நொடி பொழுதில் ,
விலுங்கியதடி எழுதுகோலை ..
காட்சியின் அதிர்ச்சியில் உறைந்தவன் ,
விரைந்து எடுத்தேன் காகிதத்தை ..
கோபத்துடன் பேசிய காகிதம் ,
உன்னை சொந்தம் கொண்டாட உருமியதடி ..
மூளை வேலை இழந்தவன் போல் ,
கசக்கி எறிந்தேன் காகிதத்துடன் உன் பெயரையும் ..
நீ கசக்கிய நிலையிலும் ,
கசங்காமல் வைத்தேன் என்னவளை என்றே ..
என்னை எரித்து சாம்பலாக்கும் வரை ,
என்னிலிருந்து பிரிக்க இயலாது என்றே ..
விறைத்து எழுந்தே காகிதம் ,
மீண்டும் பேச துடிக்க ..
சலவைப் பெட்டி கொண்டே சரி செய்தேன் ,
காகிதத்தையும் உன் பெயரையும் ..
தொடர்ந்தேன் கவிதைதனை - அருகினில் ,
மின் சலவை பெட்டியின் சூட்டோடு ...!!