பயணம்

புத்தாண்டே
புதிய பயணம் தொடங்கிவிட்டாய்,
நேற்றைய கனவு மலர்கள்
கருகி உதிர்ந்துவிட்டன..

நனவில்,
புதிய பார்வைகள்
புன்னகைகள்,
பிஞ்சாய் காயாய்-
நாளைய கனியாய்..

இயற்கை தேவனே
இதுதான்உன் விளையாட்டா,
நீ
இறக்கைக்குள் மறைத்ததை
எடுக்க
கால தேவனின்
கரம்பட வேண்டுமோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jan-15, 6:47 pm)
பார்வை : 69

மேலே