விட்டு விடாதே என்னை
விளையாட்டு மைதானத்திலே
விண்மீன்கள் வெளிச்சத்திலே
விடியும் வரை உனக்காக
காத்திருந்தேன் நான். நீ
விடியும் முன் வருவாய் என.
விடிந்த பிறகுதான்
தெரிகிறது.....நீ விபத்தில்
உயிர் இழந்தாய் என்று
என்னை மட்டும் விட்டு விட்டு
எங்கே சென்றாய்..
விண்ணப்பம் தருகிறேன்
விருப்பியே வருகிறேன்
அழைத்து செல் என்னையும்
மண்ணறையிலாவது
மங்களாமாய் வாழ்வோம்.