இன்றே விழிப்போம் நாளை வளம் கொழிப்போம்

தேசம் வளம்பெற
இணைந்தின்றே போராடுவோம்!
இயற்கையை காத்திட
மாசுக்கள் குறையும் வழிதனை ஆராய்வோம்!

தொழிற்சாலை வாகன புகை ,
கனிம வளங்களழிப்பு
கழிவுநீர் பெருக்கு
குப்பைகள் எரிப்பு
மின்சார விரயம் குறைத்தாலே வளம் பெரும் !

நால்வருக்கொரு மகிழுந்து
இருவர்க்கொரு இருசக்கர வாகனம்
பக்கத்துக்கு தெருவிற்கு நடைபயணம்
பயண தூரத்திற்க்கேற்றார் போல் நாம் மாறிடுவோம் !

எரிபொருள் செலவும் மிச்சம்
இயற்க்கையாகாது சொச்சம் !
கனிமவளமும் வளம்பெறும்
சுவாசக்காற்றும் சுகம்தரும் !

விரைந்து சென்ற வேகத்தில்
விபத்தில் சிக்கி வீழ்ந்தவர் கோடி!
வாகன நெரிசலில் சிக்குண்டு
மாண்டவர் ஆத்மா சாந்திகொள்ள
மாற்றம் கண்டால் நன்மை பயக்கும்!

வீடுதோறும் விளக்கெறிப்போம்!
விஞ்ஞான காலத்தில் முடியாதெனில்
சூரிய ஒளியில் சோலார் தட்டமைப்போம்!!
சுட்டெரிக்கும் விளக்கை தவிர்த்து
லெட் விளக்கை பயன்படுத்திடுவோம்!!

மின்சாரத்தின் சாரமாய்
நிலக்கரி நீரும் மிச்சமாய்
அணுஉலை ஆபத்தில் வாழாமல்
இயற்க்கை காத்திட இது நல்வழியே !

தொழிற்சாலை கழிவுகள்
குடிநீரில் கலந்திடாது தடுத்திடுவோம்!
இருக்கும் ஏரிகுளங்களை தூர்வாரி
குப்பை சேராது காத்திடுவோம் !

வீட்டுகுப்பைகள் தெருவில் வீசாது
குப்பை தொட்டியில் கிடத்திடுவோம்!
பெருகும் கொசுவை தடுத்து
நோய் நொடியில்லாது வாழ்ந்திடுவோம் !!

மக்கும் மக்கா குப்பை பிரித்து
மறுசுழற்சி செய்தே பயன்பெறுவோம்!
மக்கும் குப்பையை மண்ணில் புதைத்து
மண்வளம் செழிக்க முனைந்திடுவோம்!!

எல்லோரும் இணைந்து இன்றே செய்திட்டால்
இயற்கை மனம்குளிர்ந்து மண்ணில் மழைபொழியும்!!
சுற்றுச்சூழல் செழித்தால் சுகமும் நாட்டில் வளமும் பெருகி
நாளைய பாரதம் வல்லரசாவது திண்ணம் !

எழுதியவர் : கனகரத்தினம் (18-Jan-15, 4:05 pm)
பார்வை : 326

மேலே