மாற்றம்

பார்த்த கண்கள் பறிக்க
பச்சைநிறப்போர்வையில் வலம்வந்தவள் ... ..
இன்று ,
பகலவனைத் தொடும்வகையில்
பலநூறு கட்டிடங்களாய் ...
தேடும் விழிகள் தேட
என்னவளே !!..
நீ தென்படாமல் போனதன் காரணம் என்ன?
செந்நெல்லும்,தினைமாவும்,
கேழ்வரகும், சாமையும்,
வரகரிசியும், சோளமும் ,
வரப்பும், வாய்க்காலும் ,
குளமும் ,குட்டையும் ,
எரியும், கண்மாயும்,
எங்கே போனது ???
இத்தனை கொடுத்த உன்னை
பாவிகள்
பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு
பலநூறு கூறுகளாய் போட்டதாலோ??
எட்டடிகூட சொந்தமில்லை
என்பதை அறியாத இம்மாக்கள் ...
ஏனோ !!
உன்னை தொலைத்துவிட்டு
கால்படும் இடத்திற்கு கூட
காசு கொடுக்கும் கூட்டத்திடம்
மாட்டப்போவதை ஏனோ அறியவில்லை???