யாரடா நீ திருட்டுப் பயலே
யாரடா நீ
எங்கிருந்து வந்தாய் என்னைக்கொல்ல ..!!
என் இரவுகளை பகலாக்கி விட்டதால் நீ
இமைகள் உறக்கத்தை இழந்து தவிக்கின்றது .
தழுவிடும் தென்றலும் சற்றுத் தடுமாறி தீயினை வீசுகின்றது
நீ திரும்பிப் பார்க்கும் அந்த நொடியில் .!
நாவில் உமிழ்நீர் இன்றி
வறண்டு விடுகின்றது
இதழ் திறந்து நீ புன்னகைகையில் ..!
இதுவரை என் உறவாக இருந்த
இசையை இயற்கையை ரசிக்க
முடியாமல் உள்ளம் உன்
முகம் தேடியே அலைகின்றது ..!
அடுத்த வீட்டு அழைப்பு மணிக்கூட
ஆர்ப்பரிக்க வைகின்றது மனதை
நீ வந்துவிட்டதாய் எண்ணி ..!
பார்ப்பவர் கண்களுக்கு பைத்தியமாய்
மாறி விட்டேன் அடிக்கடி
தனிமையில் பேசிக்கொள்வதால் ..!!
திடமான என் இதயத்தை திருடிய
கள்வனே
திருப்பி கொடுத்துவிடு நீ திருடிய
என் இதயத்தை அல்ல
இன்னும் திருடப் படாமல் இருக்கும்
உன் இதயத்தை.....!!!!