கொஞ்சும் பைங்கிளி
இதயம் சொட்டும் வலிகளை வரிகளாக்கி
இதமான கவியாக எழுத்தினில் ஏற்றிடும்
இளவரசியின் குரலோசை மரகத குயில்
இலகும் இனிமையை ஈந்திடும் ..
தித்திக்க தேன்சொரிய தெவிட்டாத திணை
தேர்ந்து வெண்பாவில் மாலை தொடுக்கும்
தேனரசியின் குரலோசை கொஞ்சும் பைங்கிளி
சிந்திடும் சந்தத்தை மிஞ்சிடும் ...
ஆழமாய் பதியும் எத்தணிக்கும் கருவிற்கு
அன்புமை தீட்டி ஏட்டினில் வார்த்திடும்
அம்மையாரின் குரலோசை அழுதிடும் மழலை
குளிர்ந்திடும் தாலாட்டை கொஞ்சிடும் ..
அன்பு அம்மா சியாமளா ராஜசேகர் அவர்களுக்காக .....