அவளிடம் வாங்குவேன் கோடி முத்தங்கள் 555

மழலை...

தினம் தினம் அவளை நான்
பார்க்கும் போதெல்லாம்...

சொல்ல நினைக்கிறேன்
என் இதழ்கள் பிரித்து...

அவள் என்னை பார்த்து
சிரிக்கும் போதெல்லாம்...

சொல்ல முடியாமல்
துடிக்கிறேன்...

அவள் என்னை கட்டிபிடித்து
கொஞ்சும் போதெல்லாம்...

சொல்ல முயற்சித்து
தோற்கிறேன்...

அவள் என்னை முத்தமிடும்
போதெல்லாம்...

உற்சாகத்தில் எப்படியும்
சொல்லிவிட துடிக்கிறேன்...

நான் அழும்
போதெல்லாம்...

கட்டியணைத்து முத்தம் பதித்து
என் செல்லமே என்று
சொல்லும் போதெல்லாம்...

அழுகையை நிறுத்திவிட்டு
சொல்ல துடிக்கிறேன்...

முடியவில்லை மீண்டும்
மீண்டும் அழுகிறேன்...

அவளிடம் முத்தம்
வாங்கிக்கொண்டே...

நான் பேசும் சக்தியை
சீக்கிரம் கொடு எனக்கு...

அவளை அம்மா
என்று அழைக்க...

அப்பொழுதும் வாங்குவேன்
என் மேனியெங்கும் முத்தங்கள் கோடி...

கடவுளே நான் கேட்பதெல்லாம்
இதுதான் உன்னிடம்...

***அம்மா***.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Jan-15, 8:43 pm)
பார்வை : 84

மேலே