தாய்மையின் தாலாட்டு-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

தாய்மையின் தாலாட்டு
அன்னையே!
என்னை உன் வயிற்றில் சுமந்தாய்
தொப்புள் கொடியினால் உறவை தந்தாய்
பத்து மாதம் உன் கருப்பையில் வைத்து
பாதுகாத்தாய் அதன் பின் உயிரை கொடுத்து ஈன்றாய்.

உன் குருதியை பாலாக தந்தாய்
கையினால்அமுதூட்டினாய், பாசத்தால்
அரவணைத்தாய், மழலையை கற்றுத்தந்தாய்,
பாதம் மேல் பாதம் வைத்து நடக்க கற்றுத்தந்தாய்.

என் கரம் பிடித்து பள்ளிக்கு
கூட்டிச்சென்றாய். மடி மீது தலை
வைத்து நிலவை காட்டி தாலாட்டு
பாடி துயில வைத்தந்தாய்.என்
துக்கத்தில் நீயும் பங்கு கொண்டாய்.

நீ பட்டினி கிடந்தாலும் எனக்கு அமுதம்
தந்தாய்.ஆசைகளை பூர்த்தி செய்தாய்.நீ
சமைத்த உணவை நான் சுவைத்த பின்
உண்பாய். எனக்கு துக்கம் ஏற்படும் போது
முதலில் நீதான் கண்ணீர் சிந்துவாய்.

எனக்கு பிடித்ததை தேடிதேடிச்செய்வாய்.நானோ!
உன் அகம் மலரும் படி நடந்ததேயில்லை.நான் உன்னை
தூற்றினாலும், கண்ணீர் சிந்த வைத்தாலும் என்னை
ஈன்றே அன்னை நீ என் உயர்வுக்காக கடவுளிடம்
கண்ணீர் சிந்தி பிராத்திப்பாய்.

நான் உனக்கு நோவினை செய்தாலும் என்
பாவைகளில் கண்ணீர் ததும்பும் போது நீ
கதறி அழுவாய் உன் நெஞ்சத்தில் இருப்பது
தூய்மையான மாசற்ற அன்பு மட்டும் தான் அம்மா

என்னை படைத்த இறைவனை மறந்தாலும்
ஈன்றேடுத்த உன்னை மறக்க மாட்டேன்,என்னை
ஈன்று, பராமரித்து, வளர்த்த உனக்கு நான்
ஏழேட்டு ஜென்மமும் கடனாளி

என் உடலில் உயிரே உள்ள வரை உனக்கு
தொண்டற்றினாலும் என் கடன் தீர்வையாகது
மறுஜென்மத்திலாவது நீ எனக்கு குழந்தையாய்
பிறக்கணும் அம்மா!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (18-Jan-15, 1:59 am)
பார்வை : 212

மேலே