என்ன வாழ்க்கடா இது

இங்க நான் எழுதி இருக்குற எல்லாமே எனக்கு மட்டும் இல்ல .. எல்லோருக்கும் , ஏன் இதை இப்போ படிச்சுட்டு இருக்குற உங்களுக்கும் கூட எப்போதுமே வாழ்க்கைல நடந்துட்டே இருக்குற சிலது தான்...


ஆனா அதென்னவோ தெரியல இப்போ கொஞ்சம் நாளா சுற்றி முற்றி சூழ்நிலைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் போயிட்டு இருக்குறதுனால , திடிர்னு எல்லாம் ஒண்ணா சேந்து என்னையும் மீறிக்கிட்டு (எப்பவும் போல) இன்னிக்கு ஒரு கட்டுரையா வெளியாகிடிச்சு...


இந்தக் கட்டுரைல நிச்சயம் ரொம்ப நயமான எழுத்து நடை இருக்கவே இருக்காது...


அதாவது ,

வாழ்க்கைல என்கூட பல வருஷம் பழகினவங்க , என் க்ளோஸ் பிரெண்ட்ஸ் , என்னை என் உறவுகள் மூலமா அறிந்து கொண்டவர்கள் , ஏன் என் வாழ்க்கைல திடிர்னு அறிமுகம் ஆகுற மனிதர்கள் முதற்கொண்டு அத்தனை பேருக்குமே என்னை பற்றி என் மேல ஒரே ஒரு எண்ணம் தான்...


அது ,

*இதுக்கெல்லாம் வாழ்க்கைல என்ன கவலை இருந்துடப் போகுது*

வ ரே வ...


இறந்தகால கவலைகளோ இல்ல எதிர்கால பயங்களோ எதுவுமே நம்மை பாதிக்காம இந்த நொடி சந்தோசமா வாழுறது தான் வாழ்க்கை ' - அப்படின்னு குறைஞ்சது ஒரு 2312 முறை கேட்டு இருப்போம் நாம எல்லாருமே ...பல இடங்கள்ல பல சூழ்நிலைகள்ள பல பேர் வாயில இருந்து...


சரி ஓகே... எந்தக் கவலையும் பயமும் இல்லாம வாழ்க்கையை இந்த நொடி மட்டுமே அனுபவித்து வாழ்ந்துரலாம்... ஒத்துக்கறேன்...அப்படியே இருக்கட்டும் ...


அட ராமா , அப்போ இந்த நொடி , வாழ்க்கைல மினு மினுன்னு மின்னிக் கொண்டிருக்குற பிரச்சனைகளை எங்க கொண்டு போய் தள்ள ...


ஒன்னும் புரியலையே ...


வாழ்க்கைல எப்போ எந்த ரூபத்துல இந்த 'ட்விஸ்ட்' அப்படின்னு ஒன்னு வருதுன்னு சத்தியமாவே ஒன்னும் கண்டுபுடிக்கவே முடிய மாட்டேங்குது...


என் அண்ணனோட நண்பர் ஒருத்தர் இருக்காரு... அவர் சொல்லுவாரு - 'உன் வாழ்க்கையை டிசைன் பண்ற டிசைனர் நீ தான்' - அப்படின்னு...கேக்க நல்லா இருக்கு இல்ல...ம்ம்ம்...


இந்த மாதிரி வாக்கியங்களை எல்லாம் கேக்கும்போது பயங்கர வேகம் வந்து அப்படியே பொங்கி எழுறது எல்லாம் என்னமோ நிஜம் தான்... ஆனா , அந்த 'பொங்கல்' நீடிக்கிறது என்னமோ நம்ம வாழ்க்கையோட அடுத்த 'ட்விஸ்ட்' வர்ற வரைக்கும் தான்...


நான் வாழ்க்கைல எந்த ஒரு பெரிய முடிவுகளுமே எப்போதும் எடுப்பதே இல்லை பொதுவா... அதாவது நான் எடுக்க மாட்டேன் , என் அப்பா அம்மா அண்ணன் யாராவது எடுப்பாங்கன்னு சொல்ல வரலை... 'முடிவு' அப்படின்னே ஒன்னு நான் எடுக்கவே மாட்டேன் அப்படின்னு சொல்ல வர்றேன்...


அதுக்கு காரணம் ,


'ம்ம்...சரி... இப்படி இப்படி பண்ணலாம்... அப்போ இப்படி நடக்கும்... அதுக்கப்புறம் நாம பண்ண வேண்டியது இது...அதுக்கப்புறம் அப்படி போகும்...அப்புறம்.......'


அப்படின்னு , இப்படி எல்லாம் full sketch போட்டு பக்கா planning ஓட அப்படியே ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பிச்சேன்னு வெய்ங்க ..... ஸ்ஸ்ஸ்ஸ் ......... அது போகும் பாருங்க வேற , கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாம ஒரு புது விதமான புதுமையான டைரக்சன் நோக்கி..... அப்படியே அப்ப்ப்படி இருக்கும்......


சரி , நடக்குறது நடக்கட்டும் அப்படின்னு ஒரு அசட்டு நம்பிக்கைல ஒவ்வொரு முறையும் அப்படியே அது கூடவே போயிடுறது உண்டு...அதுவும் ஒவ்வொரு முறையும் , சரியாத்தான் கூட்டிட்டு போகுதுன்னே நம்ப வெச்சு நல்லா ஜம்முன்னு ஜில்லுன்னு அப்படியே சிரிக்க வெச்சு சந்தோசமா கூட்டிட்டு போயி , குழிக்குள்ள தள்ளி விட்டுருது...


இப்படித்தான்... இதே தான்... இந்த மாதிரி பல தடவை அடி பட்டு , மிதி பட்டு , நூடுல்ஸ் ஆகி , நொந்து போன ஒரு நல்ல நாளா பாத்து இன்னொரு முக்கியமான முடிவு எடுத்தேன்...


இனிமே எப்பவும் எந்த முடிவுமே எடுக்க கூடாது' அப்படின்னு...


முதல்ல எதுனா அதுவா நடக்குறது நடக்கட்டும் .. அதுக்கு அப்புறம் பாப்போம் அப்படின்னு...


ஆனா , அதுக்கப்புறம் எல்லாம் சரியா நடக்குதா அப்படின்னு நீங்க கேட்டா , அங்க தான் நீங்க தப்பு பண்றீங்க...


எப்பவும் போல இப்பவும் எப்பவும் என்னைக்கும் என்னென்னைக்கும் , அதே நொந்த நூடுல்ஸ் தான்...


ஆனா , இப்போ எல்லாம் அதை எல்லாம் சமாளிச்சு கொண்டு போற டெக்னிக்ஸ் ஓரளவுக்கு தெரிஞ்சுடுச்சு... இந்த இடத்துல நீங்க இன்னொரு முக்கியமான விஷயம் நோட் பண்ணனும்... எப்பவும் ஒரே வகையான 'நொந்த நூடுல்ஸ்' ஏ கிடைக்கும்ன்னு நாம எதிர்பாக்க கூடாது...நிச்சயம் ஏமாந்துருவோம்... அது சீசனுக்கு சீசன் மாறும்... வகை வகையா.... நாம தான் எப்பவும் விழிப்பு நிலையிலேயே இருக்கணும்...


முன் கூட்டியே முடிவுகள் எடுத்து , போகாத திசை போய் , குழிக்குள்ள விழுந்து நொந்து போறதை விட இது கொஞ்சம் பெட்டரா இருக்குது ...


சரி...... இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் ......நான் முதல்ல சொல்ல ஆரம்பிச்சதை விட்டுட்டு வேற என்னென்னவோ சொல்லிட்டு இருக்கேன்...


*இதுக்கெல்லாம் வாழ்க்கைல என்ன கவலை இருந்துடப் போகுது* - கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன இந்த வசனத்தை பத்தி தான் சொல்றேன்...


அது எப்படித்தான் என்னை பாக்குற எல்லாருமே ஒரே மாதிரி இப்படியே நினைக்கிறாங்களோ... ஒண்ணும் புரியலையே புருஷோத்தமா...


ஆனா , யோசிச்சு பாத்தா என்கிட்டே ஒரு குணம் உண்டு... அது நல்ல குணமா இல்லை தேவை இல்லாத ஒன்னான்னு மட்டும் இப்போ வரை என்னால கண்டு புடிக்க முடியலை... ஆனா , அப்படி ஒரு குணம் என்கிட்டே இருக்குதுன்னு மட்டும் நான் கண்டு புடிச்சு வெச்சு இருக்கேன்...


அதாகப்பட்டது ,


என் பிரச்சனைகளை... என் கவலைகளை... என் கஷ்டங்களை ... என் துயரங்களை... நான் என்னைக்கும் எப்பவும் யார்கிட்டயும்... யார்கிட்டயும் , எப்பேர்பட்ட க்ளோஸ் பிரெண்டா பழகக் கூடியவங்களா இருந்தாலும் , நான் பகிர்ந்து கொண்டதே இல்ல..... என் கவலைகள் எங்க வீட்டைத் தாண்டி வெளிய போனதே கிடையாது...


கவலைகளை ஷேர் பண்றதுக்கு அது என்னமோ எனக்கு புடிச்சதே இல்ல... சந்தோசங்களை மட்டுமே ஷேர் பண்ணிக்குவேன் யார்கிட்டையுமே...எப்பவுமே...


என்னைப் பாக்குறவங்க , எப்பவும் நான் ஜாலியா இருந்தே தான் பாத்து இருப்பாங்க...


பல பேர் என்கிட்டே நேரடியா கேட்டதுண்டு , 'உனக்கு சோகமா எல்லாம் இருக்க தெரியுமா ... உனக்கு அழுகத் தெரியுமா' ..இப்படி எல்லாம்...


ஆனா உண்மைல , இந்த வசனங்களை எல்லாம் கேக்கும்போது , நான் அப்படியே வலிக்காத மாதிரியே நடிக்க வேண்டி இருக்கும் பாருங்க... அது தான் உலக கொடுமை அப்படிங்கறது...


நான் எப்பவுமே பாசிட்டிவா பேசுறதுனால , என் கூட ஒரு அஞ்சு நிமிஷம் பேசினாலே அவங்க பிரச்சனைகளை தீர்க்கும் தெம்பு வந்துடுறதா , சிலர் நம்பிட்டு இருக்காங்க... ஒரு வேலை அது உண்மையா தான் இருக்குமோ என்னவோ...கடவுளுக்கே வெளிச்சம்...


சோ , மற்றவர்கள் நொந்து போன நேரத்துல 'போடும்மா சீதாவுக்கு ஃபோனு' அப்படின்னு என்கூட பேசி தெம்பாகி தெளிவாகுரவங்க சிலர் இருக்காங்க... (இந்த இடத்துல என் உண்மை பேர் 'சீதா லக்ஷ்மி' என்பதை தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்)


இப்படி எல்லாம் இருக்குறதுனால தான் - *இதுக்கெல்லாம் வாழ்க்கைல என்ன கவலை இருந்துடப் போகுது* - இந்த வசனத்தை நினைக்க தோணுதுன்னு நினைக்கிறேன் எல்லாருக்கும்...


'பிரச்சனை இல்லாத மனுஷன் இல்ல..பிரச்சனை இல்லாதவன் மனுஷனே இல்ல' - இது நான் சொன்னதில்ல... எதோ படத்துல கேட்ட வசனம்...


ம்ம்... பொலம்ப நினைச்சதை எல்லாம் ஒரு வழியா ஒரு மாதிரியா பொலம்பி முடிச்சுட்டேன்... இன்னும் கொஞ்சம் மீதி இருக்குது.. ஆனா , இப்போதைக்கு இது போதும்...


எப்படியும் இன்னும் ரெண்டு நாள்லையோ இல்ல நாளைக்கேவோ இல்லை இன்னும் கொஞ்சம் நேரத்திலயேவோ , வாழ்க்கையோட அடுத்த 'ட்விஸ்ட்' சத்தியமா வந்துரும்...


அதனால ... அடுத்த 'நொந்த நூடுல்ஸ்' அப்போ மிச்சம் மீதியை பாப்போம்...


என்ன வாழ்க்கடா இது.........




- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (19-Jan-15, 6:39 pm)
பார்வை : 540

மேலே