உன் குழந்தை உனைச் செய்தால் என் செய்வாய்

வேதனைகள் மறைத்து
பலர் மடமைகள் பொருத்து
பெற்ற பிள்ளை மதித்து
அவன் உயர்வுக்காய்
தன்னலம் மறந்து
தன் சுகம் இழந்து
வாழ்வாரே இவ்வுலகில்
தியாகிகளின் சிகரங்கள்
நம் பெற்றோர்கள்

இவர் முதுமை நினைத்து
முகம் சுழித்து
ஓரக் கண்ணாலே பார்த்து
கொண்டவளுக்காய் இவர் மிதித்து
அவர் உளம் சாகடித்து
நீ உயர்ந்த ஏணியை
காலால் தள்ளி உதைத்து
அவர் மனதை நோகடித்து
உச்சிக்கு சென்றதனால் - நீ
சாதித்த சாதனை புரியவில்லை

புத்தாடை உடுத்து
நல்லுணவு தந்து
சிரித்து மகிழ்ந்து - நீ
செல்லுதல் கண்டு
பூரித்து அவர் சுகம் மறந்து
களித்து வாழ்ந்து
உனக்காய் தன் வாழ்விழந்த அவரை
வாழ்த்த மனமில்லை உனக்கு - இவரை
உன்னோடே வாழவைக்க
ஏன் இந்தத் கவலை

துரோகிகள் பலருண்டு உலகில்
அவரில் நீதானே நிற்கின்றாய் முதலில்
நன்றி மறந்தார் வாழ்கிறார் பலரிங்கு
அதில் நீதானே ஜொழிக்கிறாய் முதலிங்கு
பொன்டாட்டி தாசன்கள் பலபேரு
நீ சிகரமாய் நிற்கிறாய் இவ்வாறு
இந் நிலை மாற்ற என் செய்வாய்
சிந்திப்பாய்
உன் குழந்தை உனைச் செய்தால்
என் செய்வாய் ?
சிந்திபபாய்!! சிந்திப்பாய்!!
மனம் திருந்தச் சிந்திப்பாய்!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (20-Jan-15, 7:01 am)
பார்வை : 83

மேலே