ஒற்றை கனவே

ஒற்றை கனவே ஒற்றை கனவே
ஒரு நாள் மறுமுறை நினைப்பாயா ?
மீண்டும் மீண்டும் தொடர்ந்தேன் உன்னை
ஒரு நாள் ஒரு முறை பார்ப்பாயா?

ஆட்டி விட்ட ஊஞ்சல் போலே இரு இதயமும் ஆடுகிறது
ஓன்று உன்னது மட்டொன்று என்னது
ஆழ மனசுக்குள்ளே அதில் நூறு வண்ணத்துப் பூச்சிகளாய்...!!!

துரத்தாதே துரத்தாதே
அடி மனசுக்குள் நுழைந்து துரத்தாதே.

கனவில் தொட்டேன் காணமல் போனாய்
டீக்கடை மறைவில் இரு விரல்கள் இடையில்
உள்ளே இழுத்தேன் புகையாய் வந்தாய்

என் கண்ணை பிடுங்கி எறிந்தேன்
உன்னால் என்னை திட்டவில்லை
இதயம் திறந்து பார்த்தேன்
உள்ளே வேற யாருமில்லை
முழுசா உன்னை மறக்கமுல்ல.

கடலில் குதிக்கிறேன் சிற்பியை தேடியா இல்லை
உன்னை தேடியா பதில் நீ சொலேன் உறக்கம் கடலின் மடியிலே.

முத்தம் கேக்காத இதழுண்டா ?
பெண்ணை பாக்காத கண் உண்டா?
எத்தனை காலடி கடல் கரையின் மீது தான்
உள்ளம் உன்னை தேடி அலையுதடி
உன் சிரிப்பு கூட மருந்தாய் மாறும் ஒற்றை கனவே ஒற்றை கனவே ...!!!

எழுதியவர் : நா ராஜராஜன் (20-Jan-15, 9:06 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : otrai kanave
பார்வை : 78

மேலே