பால்வாடி பொழுதுகள் ...!!!!!

( கவலை மறந்து , வயதை மறந்து சில நொடிகள் மழலையாய் மாறுவோம் )
மயில் இறகாய் வருடும் பால்வாடி பொழுதுகள்..!
எண்ணெய் தடவி , வகிடெடுத்து அன்னை
கைகளால் சீவிவிட்ட தலை முடியின்
அழகு , இப்போது இருக்கும் வாசனை
தலை பசைகள் தருவதில்லையே..,
அன்னையின் அன்பான நெற்றி முத்தத்துடன்
வைக்கும் செந்துரபொட்டின் வாசனை
இப்போது இருக்கும் பாடிஸ்ப்ரே...
தருவதில்லையே ..,
தட்டான் பூச்சு பிடிக்க , தடுக்கி
விழுந்தோம் சேற்றிலே ..!!
ஓட்டுனர் உரிமம் இல்லை ..
இருந்தும், கைகள் முருக்க..
கால்கள் பறக்க ..வாயில்
சைலன்சர் சத்தம் டுர்ர்ர்ர்ர்ர்.......,
பள்ளி மணி அடிக்க ..,
ஒற்றையடி பாதையிலே கை கோர்த்து
நாம் நடக்க, நடுவே உஞ்சலாடி வரும்
மஞ்சள் பை எங்கே..?
தின்பதற்கு தின்பண்டம் அத்தனை
இருக்க, வண்ணத்துபூச்சி வடிவ
ரொட்டி கேட்டு அடம் பிடிக்கும் நாம்..,
சிரித்துக்கொண்டே தேடிகொடுக்கும்
பெட்டிக்கடை பாட்டி..,
நம்மூரின் ஒற்றை ஆலமரம், ஆனாலோ
தொங்குமே ஆயிரம் விழுதுகள்
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வவ்வாலாய்
தொங்கி உஞ்சலாடிய பொழுதுகள் எங்கே..?
கிராமத்து வகுப்பறை சுவரில் சாய்ந்தாட
தலையில் ஒட்டிக்கொள்ளும் சுண்ணாம்பின்
அழகு , இப்போது இருக்கும் தலை சாயம்
கொஞ்சமாவது தருமா..?
கவுண்டர் வீட்டு தோட்டத்தின் திருட்டு
கொய்யாவின் சுவை,,நாக்கில் போனாலும்
இன்னும் மனதி அப்படியே..!!!
வானில் வானூர்தி பறக்க..
கைகள் ஆட்டி, பின் கைகள் நீட்டி
தெரு முழுக்க சுற்றிவருவோமே..,
கணக்கு வாத்தியாரின் பிரம்படிக்கு
பயந்து பள்ளிக்கு மட்டம் போட்டு
குட்டி சுவர் மறைவிலே கோலியாடி
பொழுதுகள் களித்தோம்..,
பட்டாம்பூச்சி பிடித்திருந்தோம்..!
பள்ளி மணி அடிக்க காத்திருந்தோம்.!!
கூட்டாம் சோறு ஆக்கியிருந்தோம்.!
பரீட்சை வர வேர்த்திருந்தோம்.!!
கண்ணாமூச்சி ஆடியிருந்தோம்..!
மழை சாரலில் கைகள் நீட்டியிருந்தோம்..!!
பஞ்சாயத்து திண்ணை அருகே..
பம்பரம் ஆடியிருந்தோம்..!
அப்பாவின் அடி வாங்கியிருந்தோம்..!!
சின்னதாய் சேட்டைகள் செய்திருந்தோம்..!
எப்போதும் சிரிப்பை மட்டுமே கொண்டிருந்தோம்..!!
பள்ளி மணி அடிக்க நேரமாகுது..!
கிளம்பனும் சீக்கிரம்..!!
எழுந்திரிக்க முயற்சிக்கிறேன்..!!
என் சாய்வு நாற்காலியில் இருந்து..!!
எங்கே என் இரண்டாம் மணைவி
ஊன்றுகோள்..!!!!!!