கெமிஸ்ட்ரி
ஆண்டுகள் கழித்து நடந்த எதிர்பாராத சந்திப்பில், கிடைத்த நேரத்தில்
சிலநிமிட பரஸ்பர விசாரிப்பிற்கு பிறகு, "தகவல் தொடர்பிற்கான எதையும் பகிர்ந்து கொள்ளாமல்" சம்பிரதாயமாக விடைபெற்றோம்,
"நேரம் இருக்கும் பொழுது அழைத்து பேசுவோம்." என்று...
"இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்து போகிறது " என்று,
கால் நூற்றாண்டு முன் அவள் சொன்னது இன்றும் நினைவில்...