விடிவு பிறக்குமா

ஆட்சியென்பது - ஓர்
அமானிதமென்பதை மறந்து
ஆடிய ஆட்டமெல்லாம்
அடங்கியே போய்விட்டது.

தேசத்திற்கு உயிர்கொடுக்கிறோமென்று
தேசத்தையையே கருவறுத்து
வேசத்துடனான முகத்துடன்
நாசத்தினைத்தான் செய்திருந்தனர்.

அப்பாவி உயிர்களை
அனியாயமாய்ப் போக்கி
அரக்கனாய் அரண்மணையிலமர்ந்து
அதி உச்சத் தாண்டவம் ஆடியிருந்தனர்.

காலத்தின் பதில்
கட்டாயத்தின் மாற்றமாகியது
இன்று நீர் கண்ணீர் விடக்கண்டு
என் தேசமே மகிழ்கிறது

அத்தனை ஆட்சியாளர்கக்கும்
இதிலுண்டு அரியதொரு படிப்பினை
சமூகம் ஈந்தளிக்கும்
இன்றியமையாப் பொறுப்பு உங்களாட்சி.

ஆழுவதும் வாழுவதும்
சமூகத்துக்காகவே அல்லாது
சுகபோகமாக்குபவர்களுக்கு
சமூகப்பாடம் நிச்சயமுண்டு

பல தசாப்தங்களாய்க்
காத்திருக்கும் எம் சமுகத்திற்கு
தலைவர்களானவர்களின்
காத்திரமான சாதனைகளெங்கே??

காற்றுள்ள போது தூற்றுவார்களென
காத்திருந்து கழைத்துப்போன
கண்ணியமான எம் சமுகத்திற்கு
இனிமேலாவது விடிவு பிறக்குமா??

எழுதியவர் : ஹாசிம் (21-Jan-15, 6:50 pm)
சேர்த்தது : ஹாசிம்
பார்வை : 75

மேலே