கொலை வெறிவாதியே
தீவீரவாதியா நீ! அல்ல.
கொலை வெறிவாதி! - நீ!
உயிர் வேரறுத்து உடல் சாய்க்கும்
மனிதம் வெட்டி
நீ!
மரணம் கண்டு மகிழ மணிக்கணக்காய்
காத்திருக்கும் மனநோயாளி
நீ!
குற்றுயிர் போராளியின் குருதி குடிக்கும்
தாகம் கொண்ட குற்றவாளி
உன் பயண பாதையின் புறமிரண்டும்
பிணப் புதைவுகள்
கிழிந்த தசை பிண்டங்களின் தூவல்களில்
உனக்கு வெற்றி விழா
ஆங்காங்கே இரைந்து கிடுக்கும்
இரத்த கட்டிகள்
காற்று முழுதும் நிரம்பிய
உயிர் வாசம்
இதைத்தான் கொண்டாயா
கொள்கையாய்!
இறைவன் சொன்னான
உயிர் பறிக்க!
மதம் விரும்பியதா
மரணிப்பதை!
சாதி சாவுகளை
கொண்டாடுமா?
பித்தனே!
பிணம் குவிக்கும் கொள்கை விடு!
குருதி குடிக்கும் தாகம் தனி!
உன்னுயிர் போலவே பிறருயிரமென்பதை உணர்!
மனிதம் மகத்தானது!
மனிதனாயிருப்பது அதனினும் பெரிது!
மூடனே!
ஒட்டிய வயிறுடன்
ஒருவாய் சோறின்றி
உயிர் பிரியும் அவலத்தில்
உலகமனிதமொருகோடி
ஒற்றை சோறு தந்திருந்தாலும் - உன்!
பிறப்பின் அர்த்தம் புரிந்திருப்பாய்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
