அணில்கள்

ஒரு குட்டி அணில் ....
கேட்டது..
ஆரஞ்சு பழத்திடம் ..
ஏன் நீ ஆப்பிளைப் போல் இல்லை?
ஆப்பிள் பழத்திடம்..
ஏன் நீ மாம்பழம் போல் இல்லை?
மாம்பழத்திடம்
ஏன் நீ கொய்யாவைப் போல் இல்லை ?
எதுவுமே பதில் சொல்லவில்லை..!
குட்டி அணிலும் .. கோபப்படவில்லை..!
சுவையாக இருக்கின்றவரை..
எது எப்படி இருந்தால் என்ன என்று
விளையாட சென்று விட்டது!
..
என் தோட்டத்தில் நிறைய அணில்கள் !.
பலவித பழங்கள் !