உடல் உறுப்பு தானம்

செத்தும் கொடுக்க சீதக்காதியால்தான் முடியுமா
நம் ஒவ்வொருவராலும் முடியும்
செத்தவருக்குதான் அது செத்த உடல்
மத்தவருக்கோ அது உயிர்தரும்
அதிசய பெட்டகம்
கண் மூடிவிட்டவரின் கண்மூடா விழித்திரை...
செத்தும் சாகாமல் துடிக்கின்ற இதயம்...
சீருடன் இயங்கும் கல்லீரல்...
இன்னும் எத்தனையோ...
மருத்துவ அறிவியலின் மகத்துவம்
மரணத்தையே மாற்றி எழுதிவிட்டன
மண்ணில் புதைந்து மக்குவதை...
தீயில் எரிந்து சாம்பலாவதை ...
சாகப் போராடும்
சக மனிதர்களுக்கு தரலாம்...
கல்லாதவரே எனினும்
உயிர் இல்லாதவரும்
உன்னத மனிதராய் திகழலாம்...