அன்புறவு

ஆகாயம்
கேட்டிறாத
ஆரிராரோ சப்தம்....
தாயாக
பார்த்திடாத
பெற்ற பிள்ளை பத்தும்...
தள்ளாடும்
வயதில்
தாயாகப் பார்த்தாய்....
ஊறிய
உதடுகளில்
புன்னகை தேய்த்தாய்....
உடைந்திடும்
அணையாய்
விழிதுளைத்திடும்
நீர்க்கோர்வை....
உறங்கும்
இடத்தை
உறையிடுமென் சால்வை...
ஏக்கங்கள்
எகிறி
குதித்திடும் நிலையில்
உன் பாதங்கள்
ஊர்ந்திடும்
இலைமேல் எறும்பாய்...
என்னென்று
சொல்முடியா
கதையின் நீளம்.
தோள்
கொடுத்து
நீவிடுவேன் துயறும்போது...
கதை சொல்லி
தாலாட்ட
போட்டுவைத்த
ராகமெல்லாம்
கரைந்தோடிப்
போகையிலே
ஆடுதென்
நாடி நரம்புயெல்லாம்...