நல்ல மனைவி

ஒரு பெண் தன் புருஷனுக்கு உடல்நலம் மோசமானதால் மருத்துவரிடம் அழைத்து செல்கிறாள்.

பரிசோதனைக்கு பின் மருத்துவர் அந்த பெண்ணிடம்,

மருத்துவர்: தினமும் அவருக்கு பிடித்த மாதிரி சமைத்து கொடுங்கள்.எப்பவும் அன்பாகவும் நல்ல மனநிலையோடும் அணுகுங்கள். உங்கள் பிரச்சனை எல்லாம் கொட்டி தீர்காதீர்கள்.

பெண்: சரி டாக்டர்.

மருத்துவர்: டிவி,பேஸ்புக் எல்லாம் ஒதுக்கிடுங்க. அவர் கூடவே எப்பவும் இருங்க.
முக்கியமா நகை,ஆடம்பரம் லாம் கேக்காதிங்க.

பெண்: சரி டாக்டர்.

மருத்துவர்: இப்படி ஒரு வருஷம் இருந்தீங்கனா, உங்க புருஷன் தானா குணம் ஆயிடுவாரு.

பெண்: ரொம்ப நன்றி டாக்டர்.

வீட்டிற்கு திரும்பும் வழியில்,புருஷன் மனைவியிடம்,

புருஷன்: டாக்டர் என்ன சொன்னாரு?

மனைவி: (கண்ணை கசக்கிக்கொண்டு) பொழைக்க வழியில்லை என்று சொல்லிட்டார்..

எழுதியவர் : (22-Jan-15, 9:52 am)
Tanglish : nalla manaivi
பார்வை : 357

மேலே