நகைச்சுவை 0003

ஒருவன் பல் வைத்தியரிடம் சென்றான். அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் பின்வருமாறு ..

"சொத்தைப் பல்லை எடுத்துக் களைவதற்கு எவ்வளவு செலவாகும்"
"ரூபாய் 850 ஆகும்"
"கொஞ்சம் குறைவாக இருந்தால் தேவலை. மயக்க ஊசி கொடுக்காமல் எடுத்தால் குறைவாகத் தானே பணம் வேண்டும்"
"ரூபாய் 450 குறையும்".
"நீங்கள் செய்யாமல் உங்கள் மாணாக்கன் ஒருவர் செய்தால் இன்னும் குறையுமா" ?
"நிச்சயமாகக் குறையும்".
"உங்கள் மாணாக்கன் ஒருவன் மயக்க ஊசி கொடுக்காமல் செய்தால் ...?
"ரூபாய் 200 போதும். ஆனால் வலியை பொறுத்துக் கொள்ள வேண்டுமே"
"சரி. நீங்கள் அவர்களுக்கு எப்படி பல் பிடுங்குவது என்று பாடம் கற்றுக்கொடுப்பதாகச் சொல்லி, ஒரு மாணவன் பல்லை பிடுங்க, மற்ற மாணவர்கள் அதைப் பார்த்துக் கற்றுக்கொள்வதென்றால் ?
"நடத்தலாம். ஆனால் வேதனையில் உயிர் போனாலும் போய்விடும். இதற்கு நீ உடன்பாடு என்றால் நா உனக்கு ரூபாய் 200 தருகிறேன். சரிதானே"
"பூரண சம்மதம். நாளைக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் தாருங்கள். என் மாமியாரை அப்பொழுது அழைத்து வருகிறேன்"

=====

பி.கு. ஆங்கிலத்தில் படித்ததின் தமிழாக்கம்.

எழுதியவர் : (21-Jan-15, 5:04 pm)
பார்வை : 292

மேலே