இயற்கை விழியில் இனமோ குழியில்

இயற்கை விழியில்
இனமோ குழியில்..!

குடிசை வீட்டுக்குள்
கும்பிடும் தெய்வமென
இருட்டை அகற்றிவிட
இறைவன் வந்தானோ..?

தென்னை ஓலையிலே
தேகம் குளிர்ந்திடவே
கூரை வேய்ந்துவைக்க
குனிந்து பார்க்கின்றான்..!

முன்பின் சொல்லாமால்
முடக்கி வைத்துவிடும்
தடையில் மின்சாரம்
தனக்கே எனசொல்லி

தந்திரம் செய்வோர்கள்
தடுத்திட முடியாது
எந்திரம் பழுதென
ஏய்த்து யிவன்வரவை..!


கஜானா காலியென்று
காரணம் சொன்னபடி
வருடம் பலமுறையாய்
வரியை ஏய்த்தாலும்

விலைகள் பேசாமால்
விடியல் தந்திடுவான்
வறுமை யினத்திற்கு
வள்ளல் யிவனென்று..!

உயரே இருந்தாலும்
உறக்கம் முடிந்தவுடன்
இறங்கி வந்திடுவான்
இரவை வழியனுப்ப..!

தலையில் கணமின்றி
தரையில் வந்திறங்கி
உதவி செய்திடுவான்
உபயம் கேட்காமல்..!

வலியோர் வறியோர்
வேற்றுமை தெரியாது
உரிமை யென்றிவனை
உருக்கவு முடியாது..!

உயிரை மதித்திவனோ
உறவா யிருக்கின்றான்
அறிவை யடைந்தவனோ
அழிக்கத் துடிக்கிறான்..!

இயற்க்கை யெல்லாமே
இனமொழி மதமென்று
பிரிவினை யாகிவிட்டால்
படைப்பது பலன்தருமோ.. ?

இடையில் வாழ்ந்துவீழும்
இனமா மனிதவன்மட்டும்
கருணை யதைகொன்று
காவியை தேடுவதேன்..?

சிந்திப்போம் ..!

எழுதியவர் : ஜாக் .ஜே .ஜே (22-Jan-15, 10:20 am)
பார்வை : 107

மேலே