விடியல் தேடி

மாற்றம் வந்தது இலங்கையில்
மாற்றம் நிலைக்குமா இது கேள்வியில்
ஏங்கும் தமிழன் எதைக் கண்டான்
எண்ணங்கள் சாதகமாகும்
சமநிலை உருவாகும் மீண்டும்
சமாதானம் நிலையாகும்
அன்று வாழ்ந்த தமிழன் போல்
மீண்டும் வாழ ஆசை
கிடைக்குமா நடக்குமா
இது தமிழனின் தீராத வேட்கை
எந்த நாட்டில் வாழ்ந்தாலும்
சொந்த நாட்டில் வாழும் சுகம் சுதந்திரம்
எங்கேயும் இல்லை என்றுமே இல்லை
தடம் மாறி இடம் மாறி தத்தளிக்கும் தமிழன்
தனக்கு என்று தாய் நாடு தமிழ் நாடு
வேண்டிடவே போரிட்டான் பாடுபட்டான்
அவன் கண்ட கனவு கொண்ட கொள்கை
என்று தான் மெய்த்திடுமோ
அன்றுதான் தமிழன் நிம்மதிப் பெருமூச்சில்
தமிழா நீ இன்று வரை கண்டதெல்லாம்
சோகமும் சொப்பனமும்
இனியாவது உன்வாழ்வில் விடிவெள்ளி தோன்றிடுமா
விரைகின்றான் தமிழன் விடியல் தேடி

எழுதியவர் : பாத்திமா மலர் (22-Jan-15, 2:24 pm)
Tanglish : vidiyal thedi
பார்வை : 268

மேலே