பக்குவமாய் பத்து நன்றிகள்
ஈரைந்து மாதங்கள் ஈன்றெடுத்த
என் அன்னைக்கு முதல் நன்றி
தரணி போற்றும் ஈசனாம்
என் தந்தைக்கு மறு நன்றி
கல்வி எனும் செல்வத்தினை
கற்று தந்த ஆசானுக்கு ஒரு நன்றி
தேவைகளை தீர்த்து வைக்கும்
தெய்வத்திற்கு ஒரு நன்றி
நட்பென்ற கோவிலினில் குடியிருக்கும்
நண்பனுக்கு ஒரு நன்றி
தன்னிகரில்லா தாயகமாம்
என் தாய் நாட்டிற்கு ஒரு நன்றி
கல் தோன்றா மண் தோன்றா காலத்தே தோன்றியதாம்
என் தாய் மொழிக்கு ஒரு நன்றி
செய்யும் தொழில் தெய்வம் என்பார்
அத்தெய்வத்திற்கு ஒரு நன்றி
அண்டுமோரை ஆதரிக்கும்
அன்பருக்கு ஒரு நன்றி
கவிதைக்கு ஆணி வேராம்
என் காதலுக்கு கடைசி நன்றி!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
