கீழிருந்து மேலே

புதினமாய் வாழ
புதிதாய்ப் பிற
நிலவைப் பார்
குளிர்ச்சி அனுபவிக்க
இரவின் நடுவில்..
விழி..எழுந்திரு
போர்த்திப் படு..பின்
உறக்கம் கலைத்து விடு
வழக்கம் மாற்று..
பழையன கழி..
மனதை நந்தவனமாக்கு
குப்பைகள் நீக்கி..
மோகத்தீயில் எரிந்து போ
மோகம் அழிந்திட
சட்டையை கழற்று
சாட்டையை வீசு
புதிதாய்ப் பிற
புதினமாய் வாழ!
(பி.கு.: கீழிருந்தும் மேலாகப் படித்து செல்லலாம் ..விரும்பினால்)