சொல்லிக் கொடு

உன் வார்த்தைகளின்
இடையிடையே
இருந்த
மௌனத்தின் சப்தத்தில்..
மலர்ந்தது உன் மீது
நான் கொண்ட காதல்..!
வாழ்க்கையே..நீ.
துன்பங்களையும்
இன்பங்களையும்
அடுத்தடுத்த வார்த்தைகளாய்
பொறித்து வைத்து
எழுதிய வரிகளின்
இடையிடையே
இருந்த
வெற்றிடங்களால்
வளர்ந்தது உன் மீது
நான் கொண்ட காதல்!
சொல்லிக்கொடு..
இடையிடையே
இடையூறுகள் வந்தாலும்..
நமக்கு இடையில்
இடைவெளியே வேண்டாம்..
சொல்லிக் கொடு!