நமக்காக இது
புக்தி கொள்ளடா மனிதா..
உயிர் மீது பக்தி கொள்ளடா...!
நீயும் நானும்...
கருவறை இருட்டில்
வெம்மி வெதும்பி
தட்டி தடுமாறி
முட்டி மோதியே
எட்டி அடைந்தோம்
தரணியை அன்று ...!
ஆங்கே தனித்து போராடி
சலித்திடாத நாம்
தரணி கண்டு தயங்குவதேனோ....
பிறவி கண்ட திறமைகள் யாவும்
தம்முள் மறைத்து வைக்கும்
மர்ம உக்தியே..!
இங்கு வாழும் உக்தி மறந்து
புத்தி கெட்டு போகும் மாந்தரை
நாம் கண்டடைந்தால்....
உன்னால் முடியுமென்று
முதுகு பின்னால் தட்டிகொடுப்போம்..!
இல்லை என்றால்...
முடிந்தால் செய்து பாரடாயென்று
முகத்தின் முன்னால் மாறுதட்டிகொடுப்போம்..!
இதில் விளைந்த மனிதன்
ஒருநாள் உன்னை வென்று வாழ்வான்
அல்ல உன்னை வெல்ல வாழ்வான்...!
ஆனால் மறந்து கூட சுற்றி வாழும்
மாந்தரை நாம் முடியாதென்று
சுட்டெரிக்கும் வார்த்தைகளால்
தற்கொலைக்கு தள்ளிவிட வேண்டாம்...!
அங்ஙனம் பிறரை சாவருகே தள்ளிவிட்டால்
ஒரு நொடி மரணம் அதை நூறு கணம்
எண்ணி எண்ணி தினம் மரிப்போம்..
புக்தி கொள்ளடா மனிதா
உயிர் மீது பக்தி கொள்ளடா...!
...கவிபாரதி...