உயிர் வேண்டாம் உன்னை கொடு

என்ன " தவம் " செய்ததோ அந்த தங்க தோடுகள்
கன்னியவளின் காதுகளை கடிதுகொன்டே இருப்பதற்கு ..........

என்ன " புண்ணியம் " செய்ததோ அந்த பூக்கள்
அவள் கூந்தலில் தினமும் குடியேறுவதற்கு .............

என்ன " வரம் " பெற்றதோ அந்த வளையல்கள் அவள்
கரங்களை களமாக கொண்டு போர் புரிய..............

எத்தனை முறை முயன்றதோ அந்த மூக்குத்தி அவள்
மூக்கின் நுனியில் முத்தமிடுவதற்கு ......................

" பாவங்கள் " ஏதும் செய்தது இல்லையோ அந்த பாசி மணிகள்
திரண்டிருக்கும் பாவையின் கழுத்தில் புரண்டு விளையாட ...................

ஒற்றை "பிறவி " மட்டுமே எடுத்திருக்குமோ அந்த "ஒட்டியாணம் " அவள்
இடையோடு எப்பொழுதும் ஒட்டிகொன்டே இருபதற்கு ...........

ஆண்டவனின் ஆசி பெற்றதோ அவள் ஆடைகள் கணவனுக்கு முன்பாகவே
அவள் பெண்மை தினமும் கட்டி தழுவ ............

கொடைகள் பல பெற்றதோ அந்த கொலுசு மணிகள் அவள்
கனுகால்களை கட்டிகொண்டே சிரிபத்ர்கு..............

கடவுளின் கட்டளை ஏற்றதோ அந்த காலணிகள் காரிகையின்
கால் பாதங்களை பக்குவமாய் பார்த்துகொள்ள.............

அழகே !!!!
உயிர் கொண்ட என்னால் நீ இன்றி வாழ்ந்திட கூடும் ஆனால் உயிரற்ற
இவை யாவும் உன்னை அற்று வாழ வாய்பு ஏதும் இல்லையே ...........

------மழலை கவி ( மனோஜ் )

எழுதியவர் : மனோஜ் (23-Jan-15, 9:53 am)
பார்வை : 213

மேலே