பதில் கூறு

கான மயிலாட
கண்டிருந்த பெண்கோழி
அதுவும் தன் அடங்கா
ஆசையில் பொட்டு
வைத்து பூமுடித்து
கையிலணி பூட்டி
கால் கொலுசிட்டு
கானம்பாடி வாழ்ந்திருந்த வேளையில்
இடைதனில் நுழைந்திட்ட
ஆண்கோழி மும்முடிபோட
தங்கத்தாலி மேலும் மெருகூட்ட – தன்
இணையோடு கலகலவென
ஆடிய நேரத்தில்
அன்பான ஆண்கோழி – தன்
ஆயள்தனை முடிக்க
ஆதிமுதல் சூடிவந்த
பூவையும் பொட்டையும்
பறித்தல் முறையோ?
பெண்ணினமே நீயே
பதில் கூறு?