எங்கள் கல்லூரி

தமிழகத்தின் மணிமகுடம்
தலைநகராம் சென்னையிலே
அணிகலனாய் அமைந்ததுதான்
பச்சையப்பன் கல்லூரி!
வளைவான நுழைவாயில்
வருகவென வரவேற்கும்
வானுயர்ந்த மரங்கள்
வாழ்விற்கே வழிகூறும்!
முன்னே மணிமண்டபம்
உயர்வான தொருபீடம்
வீற்றிருக்கும் பச்சையப்பன்
பக்கத்திலே பேரறிஞர்!
அரங்கம்போல் வகுப்பறைகள்
அறிவான ஆசிரியர்கள்
சிந்திக்கும் மாணவர்கள்
சிப்பிக்குள் முத்துபோல!
அமைச்சர்கள் தலைவர்கள்
ஆட்சித்துறை அலுவலர்கள்
உருவாக்கிய உலைகளமாய்
உள்ளதெங்கள் கல்லூரி!
-சுகுமாருடன் சூர்யபுத்திரன் (Dr.சூர்யா 1995)