வளரும் காதல்

காதலை சொன்ன பிறகும்
கட்டியணைக்காத உன் கண்ணியத்தில்
வளர்கிறது என் காதல்

கண்ணை மட்டும் பார்த்து
கதை பேசும் உன் கட்டுப்பாட்டில்
வளர்கிறது என் காதல்

விரல் மட்டும் கோர்த்து
நடக்கும் உன் நாகரிகத்தில்
வளர்கிறது என் காதல்

என் வெட்கத்தை மட்டும் ரசிக்கும்
உன் கண்ணில்
வளர்கிறது என் காதல்

என் உணர்வை மட்டும்
ரசித்து எழுதிய உன் கவிதையில்
வளர்கிறது என் காதல்

தாமரை இலையில் ஒட்டாத
தண்ணிர் போல்
காமத்தில் ஒட்டாத உன் காதலில்
வளருதடா என் காதல்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (23-Jan-15, 7:56 pm)
Tanglish : valarum kaadhal
பார்வை : 102

மேலே