இதயத் திருடன்
இதய திருடனே...
எங்கே என் இதயமே,
எனை விட்டுச் சென்றதேன்?
எங்கே என் இதயனே,
எனை விட்டு போனதேன்?
இதயம் துடிப்பது உனக்காக,என்
இரவும் விடிவது உனக்காக,என்
இமையும் விழிப்பது உனக்காக,என்
இசையும் ஒலிப்பது உனக்காக...
உனக்காக காத்திருந்த
என் நாட்கள் கடக்கிறதே...
உனக்காக பூத்திருந்த
என் பூக்கள் உதிர்கிறதே...
மறந்தாயோ...இல்லை
மறைத்தாயோ...நெஞ்சத்தை
நீ சிறைப் பிடித்தாயோ...
ஊண் இல்லை உறக்கமும் இல்லை
நான் இங்கே நானாய் இல்லை
சுடுஞ் தீயும் எனை சுடவில்லை,உன்
கடுச் சொல்லே சுட்டெறிக்கிறதே...
விடுகதை ஆன காதல்
விடுமுறை கொண்டுச் சென்றதேன்?
விடைகொடு காதலனே,இல்லை உயிருக்கு
விடைக்கொடுப்பான் காலனே...
காகித பூக்களில் கவிதைகள் வரைந்தேன்,அதை
கானல் நீரில் மிதங்கிட செய்தாய்,
தாமரை இலை மேல் நம் காதல்
தவறி விழுந்ததாய் நீ சொன்னாய்...
மறந்தாயோ...இல்லை
மறைத்தாயோ...நெஞ்சத்தை
நீ சிறைப் பிடித்தாயோ...
மௌன யுத்தத்தில்
மெல்லிய முத்தத்தில்
உன்னோடு தோற்ற இரவுகள்
சத்தமின்றி அழுகிறதே
சோகமிங்கே
மேகமாகி,
மோகமென்னும்
மின்னலடித்து
கண்ணீர் மழையில் கரைந்திடுதே...
வேண்டாம் இனி ஒரு
சோகம்,
வேண்டும்,தனி யாத
தாகம், உன்னுள்
தொலைத்த என்னை
தொலைத்தை விடாதே
அது போதும்!!!
மறந்தாயோ...இல்லை
மறைத்தாயோ...நெஞ்சத்தை
நீ சிறைப் பிடித்தாயோ...
#ஜனனிராம்

