விந்தைகளும் விதைகளும் தமிழனே - உதயா
உலகிற்கே கலைகளை
உணர செய்தவன் !
எழுமிகு எண்ணங்களில்
எல்லையின்றி பறந்தவன் !
அன்பு கொள்வதில்
அன்னையை மிஞ்சியவன் !
இசை புலமையில்
இறைவனையும் மயக்கியவன் !
கட்டிட கலைகளில்
கடவுளையும் பொதித்து
மயக்கி வைத்தவன் !
விஞ்சானத்தால் விண்ணையும்
மெய் ஞானத்தால் மண்ணையும்
அளந்தவன் !
புவிக்குள்ளே நின்று
புவிக்கு அப்பால் நிகழும்
விந்தைகளை மண்ணில்
விதைத்தவன் !
அறிவில் அமரர்களையும்
மிஞ்சியவன் !
வீரத்தினை பாரெங்கும்
பரப்பியவன் !
கருணையில் கடவுளையே
பின்னுக்கு தள்ளியவன் !
கரடும்முரடான தோற்றத்தில்
காலனையும் வென்றவன் !
ஊற்றாக உள்ளத்தில்
ஈரம் கொண்டவன் !
தன் முறுக்கு மீசையால்
மூவேந்தர்களையும்
முனுமுனுக்க செய்தவன் !
ஐம் பூதங்களையும் தன்னுள்
அடக்கி ஆண்டவன் !
எட்டுத் திக்கிற்கும்
பண்பினை பரப்பியவன் !
வரலாறுகளிலும் உயிவாழும்
வற்றாத கங்கை நதியவன் !
எவன் எவன்
அவன் எவன்
தரணியும் பார்த்து
வியந்து போகும்
தமிழன் அவன் !
என்ன தவம்
நான் செய்தேன்
தமிழனாய் பிறப்பதற்கு !
((( இது எனது 100 - வது கவி படைப்பு ... என்னையும் சிறுவனாய் நினைத்து ஒரு மனிதனாய் மதித்து எனக்கு கருத்திட்டு வளர உதவிய தோழர்கள் மற்றும் தோழிகளுக்கும் எனது நன்றிகள் ....... குழந்தாய் நீ இன்னும் கவியை சிறப்பாக படைக்க வேண்டுமென நினைத்து கருத்திடாமல் கவியை மட்டும் படித்து சென்று எம்மை மெருகேற்றிய என் உடன் பிறவா உறவுகளுக்கும் எமது நன்றிகள் )))