உன்னில் நான் - உதயா

தேடி தேடியே
தொலைந்து போறேன்
என்னை உன்னில் காண
உருகி போறேன்
தேவதை உனை பார்க்க பார்க்க
தெருவெல்லாம் அலையிறேண்டி
தென்றலாக உருவமெடுத்து
தேகத்தினை சிறகாய் நெய்ந்து
சிந்தையில் உன் நினைவைத்து
வனமெல்லாம் தேடுறேண்டி
பூவாய் உன்னை கண்டுவிட்டால்
செடியாய் தான் போவேனடி
விண்மீனில் கண்ணை வைத்து
அன்பினில் மெய்யை வடித்து
முகிலையும் துணையாய் கொண்டு
பாரெங்கும் தேடுறேண்டி
நிலவாய் உன்னை கண்டுவிட்டால்
இருளாய் தான் போவேனடி
ஒளியை பிடித்து காலில் கட்டி
காற்று ரதமேலே ஏறி
கண்ணில் துயிலை துரத்திவிட்டு
பாலை எங்கும் தேடுறேண்டி
நீராய் உன்னை கண்டுவிட்டால்
சுனையாய் தான் போவேனடி
என்ன சொல்ல
எது சொல்ல
எங்கெங்கோ அலையிறேண்டி
மங்கை உன்னை
கண்டெடுத்து
மனதைகவர தேடுறேண்டி.....