குட்டி தேவதை தாலாட்டு

தேவதை துகளே
பாரிஜாத மலரே
அழகின் திமிரே

உன்னோட பேச்சில்
முச்சுயில்லாமல் போனதடி
வார்த்தைகள்

தவழ்ந்து நடக்கையில்
தலைகீழா விழுகையில்
அதை நான் ரசித்தேன்

மின்னலில் கயிறு எடுப்பேன்
மேகத்தில் சேலை தரிப்பேன்
அதில் தூலி செய்து -தூங்க வைப்பேன்

விம்பி விம்பி
அழுகையில் விமானம்
வாங்கி தருவேன்

அடம் பிடித்து அழுகையில்
இந்த அண்டம் உனக்கு
சொந்தம் என்பேன்

பொய்களை பொறியாய்
விழுங்கி அமைதி கொள்வாய்
தூங்கி எழுவாய் அண்டம்
எங்கே என்பாய் -மீண்டும்
கடலை பொங்கவிடுவாய் கண்ணில்

பொம்மைகள் பொய் என்பாய்
மாமா நீ தான் பொம்மை என்பாய்
வெளிச்சம் கொடு புன்னகையில்

மிட்டாயில்லை என்றால்
எறும்பாய் கடிப்பாய்
கொடுத்தால் உடும்பாய்
கட்டி பிடிப்பாய்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (25-Jan-15, 11:01 am)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
பார்வை : 763

மேலே