என் இளமைக்கு என்ன பதில்

இணைந்தே இருக்கத்தான்
இத்தனை நாள் காத்திருந்தேன்
இனிமையாய் இருக்கத்தான்
இளமையோடு நான் இருந்தேன்..

மின்னலாய் வந்த இன்னலை கூட
சுவைத்தே அனுப்பிவிட்டு
சுற்றியே வந்தேன்
உன்னை மட்டுமே நான்..

என் இளமையை தவிக்கவிட்டு
உன் இணைப்பை துண்டிக்க
முயல்வது ஏன் பெண்ணே?
என் இளமைக்கு பதில் தருவாயா?

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (25-Jan-15, 10:57 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 68

மேலே