உசுராய் வந்து விடு

என் நினைவில்
நீ இருந்ததால்
என் கனவில் காண
வேண்டுமாய் இருந்தது.

என் இதயத்தில்
நீ இருந்ததால்
என் இதயம் இயக்கி
கொண்டு இருந்தது.

என் உடலில்
நீ இருந்தால்
என் உசுரும்
என்னோடு இருக்குமே..

என் உடலுக்கு
உசுராய் வந்து விடு
என் உடலோடு
நீயும் ஒட்டி விடு.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (25-Jan-15, 11:54 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 56

மேலே