எனக்குள் ஒரு தொலைதூரப் பயணம்

நி - தானித்தேன் - பிறகு
தி - யானித்தேன்.....!!

நீரோட்ட நீச்சலில் நிலையின்றி கடக்கையில்
நிச்சயமாய் நான் உங்களில் ஒருவன்......

நிலையாமை அறிந்ததும் நிச்சயம் புரிந்ததும்
நிம்மதி என்பதன் நிலைதனை அறிந்தவன்...

என் சடலத்தின் சடங்குகள் என் விழிமுன் கண்டேன்
என்னால் எதுவும் என்ற கர்வத்தை விடுத்தேன்....

ஆம்....

நி - தானித்தேன் - பிறகு
தி - யானித்தேன்.....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Jan-15, 12:23 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 71

மேலே