என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி

காகிதக்கப்பல் விடும் சிறார்களின்
கனவுகளை நனவாக்க வருகிறேன்.
மொக்குகளுக்கு குடை பிடிக்காதீர்!
இன்றாவது புனிதமான நீரிலாடட்டும்!


உலகமே!
மொழிகளெல்லாம் அத்துப்படி.
ஆமாம்! கூரைகளின் இடுக்கில் புகுந்து
குடித்தனம் புரிகிறேன் புத்தகங்களோடு....


ஓ ...... காதலர்களே!
பூங்காச் செடிகளோடு நடுங்கப் போகிறீர்கள்!

மனித பிரமாக்களே!
நான் வி(அ)ழுவதால்
தான் விளைச்சல்...

ஏர் பூட்டும் அவனின்
முதுகுத்தண்டை மூர்க்கமடைய வைப்பதும் யானே!

விதைத்த நெல்லிற்கு
விடை தெரியாமல் கேள்விக்குறியாய்
வளைந்து நிற்கிறானே......
அவனை வியப்பில் ஆழ்த்த
ஆச்சரியக்குறிகளாய் வந்து
அணைக்கு இணையாவதும் யாமே!

போனால் போகட்டுமே!
என்பதல்ல என் புத்தி.
கட்டிடங்களே! - உங்கள்
சூட்டையும் தணித்து விடவே வடிகிறேன்...

ஆறறிவாளர்களே!
இறுதியாக இதை மட்டும்
231/2° செவி சாய்த்துக் கேளுங்கள்!




குடங்களில் நீர் பருகுவது குற்றம்!
குழி வெட்டிச் சேமிக்காதீர் - மண்ணில்
குப்பை கொட்டிச் சீரழிக்காதீர்

இப்படி இருங்கள்!
இருப்பேன் எங்கும்.

கிணறாய்.....
ஆறாய்...
குளமாய்...
குற்றாலமாய்....



................................. ......................................



கவிப்பேரரசு அவர்களால் கொடுக்கப்பட்ட தலைப்புத்துளி....
அந்த நாளன்று கல்லூரி முடிந்து.,பேருந்தில் செல்லும்போது மழை....ஜன்னல் வழியாக மொத்தக் காட்சிகளையும் அள்ளிவைத்துக்கொண்டு வீடு வந்தடைந்தபின் தூறினேன்...பரிசு நல்விப் போனாலும்.....மனசெல்லாம் ஆனந்தம்...காரணம்?

வைரமுத்து அவர்களின் கரத்தால் பரிசு வாங்குவதை விட.....இப்படிப்பட்ட தலைப்பை அவரிடமிருந்து பெற்றதே முடிவில்லாத வரமென தோன்றிக்கொண்டே இருக்கிறது...

எழுதியவர் : திருமூர்த்தி.வெ (25-Jan-15, 4:17 pm)
பார்வை : 303

மேலே