சோம்பேறி
ஒரு நாள் பகல் நேரத்தில் நல்ல வெயிலில் ஒரு இளைஞன் உறங்கி கொண்டிருந்தான். அப்போது அவ்வழியே வந்த ஒரு பெரியவர் அவனை பார்த்ததும் கோபமானார். நேரே சென்று அவ்விளைஞனை சென்று தட்டி எழுப்பினார். அவர்,
" இப்டி எந்த வேலைக்கும் போகாம வெட்டியா தூங்கிகிட்டு இருக்கியே உனக்கு வெக்கமா இல்ல?சோம்பேறித்தனம் தான் மனிதனின் மிக பெரிய எதிரின்னு விவேகானந்தர் சொல்லியிருக்கார் தெரியுமா?"
அதை கேட்ட அந்த இளைஞனுக்கு செம கோபம்.உடனே அவன்,
" யோவ் பெருசு இவ்ளோ பேசுறியே காந்தி தாத்தா என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?"
"என்ன சொன்னார்?"
"எதிரியை நேசி அப்டின்னு சொல்லியிருக்கார். இப்ப நா அதை தான் பண்றேன்" என்று கூறிவிட்டு மீண்டும் உறங்க தொடங்கினான்.
( எப்பிடி தான் இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ?????????)