தேர்தல் அறிக்கை

நம்ம கட்சி முதன் முதலா தேர்தல் களத்த சந்திக்கப் போகுது. தலைவர் மேலெ நெறையா வழக்கெல்லாம் இருக்கு. நம்ம கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சம் என்னவா இருக்கும்?

அட என்னப்பா அது தான் ஊரறிந்த ரகசியமாச்சே .

எனக்குத் தெரியாது . நீயே சொல்லுப்பா.

சட்டத் திருத்தம் தான். அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் விரும்பும் நீதிபதியும் அவருக்குப் பிடித்த அரசு வழக்குரைஞரும் தான் வழக்கை விசாரிக்க வேண்டும். அவர் விருப்பபடி பிணை வழங்கவேண்டும்
நம்ம கட்சி ஜெயிச்சா இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்.

எழுதியவர் : மலர் (27-Jan-15, 4:16 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : therthal arikkai
பார்வை : 157

மேலே