நாங்க ஆச்சிக்கு வந்தால்
தொண்டன்: அண்ணே புதுசா கட்சி ஆரம்பிக்கப்போறதா சொல்றீங்களே இருக்கிற பெரிய கட்சிகளோடு போட்டி போட்டு ஜெயிக்கணும்னா பெரிய திட்டம் வேணுமே என்ன செய்யப்போறீங்க?
தலைவர்: அதாவது நம்ம கட்சி ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தா என்ன செய்யப்போறதா தேர்தல் அறிக்கை கொடுக்கப்போகிறோம்னு சொன்னால்...
தொண்டன்: சொல்லுங்கண்ணே! ரொம்ப ஆவலா இருக்கம்ல..
தலைவர்: அதாவது ஆட்சிக்கு வந்தவுடன் நிறைய குழுக்கள் அமைச்சு ஒவ்வொரு குழுவையும் ஒவ்வொரு தெருவுக்கு அனுப்பி காலையிலே நேரத்தில எல்லா மக்களையும் எழுப்பி பெண்களுக்கின்னா பெண்களை வச்சும், ஆண்களுக்கின்னா ஆண்களை வச்சும் பாத் ரூம் போக வச்சு அப்புறமா குளிக்க வச்சு துணி மாத்தி
தல சீவி பவுடர் அடிச்சி அவுங்கள சரி பண்ணிட்டு .. அந்த குழு போயிரும். அப்புறமா அடுத்த குழு வரும், அவங்களோட வேலை என்னன்னா இவுங்களுக்கு புடிச்ச உணவ அதே மாதிரி ஊட்டிவிட்டு வாய தொடச்சு விட்டுட்டுப் போயிரும். அடுத்த ஒரு குழு வரும், வயசானவங்கள்ளத் தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும், கொழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும், அப்புறமா வேற ஒரு குழு வரும், மதிய சாப்பாடு
ஊட்டி விட்டுப் போகும், சாயந்திரம் அடுத்த குழு வந்து துணி தொவச்சு காய வச்சு .. அப்புறம் ராத்திரி டிபன் கொடுத்து தூங்க வைக்க ஒரு குழு.. செலவு எல்லாமே அரசாங்கத்தொடது
தொண்டன்: அண்ணே எல்லாச் சீட்டையும் அள்ளிட்டு வந்துருவம்னே...