அழகை தொலைப்பதா பக்தி

வேண்டுதல்கள் வேண்டாமே!

திருவிழா கோலாகலத்தில்
குழந்தையின் குதூகலத்தோடு
இந்நிலை நிலைபெற்றிட
வேண்டியவாறு முன்னேறினேன்
வேண்டுதல்கள் வகைகண்டு
தடுமாறி பின்வாங்கினேன்

கன்னக்கதுப்பும், முதுகுத்தோலும்
துளைகண்டு, அலகுகண்டு
தேரிழுக்கும் வடமாகி

இதயத்தை வடுவாக்கியது நமக்கு!

அடிதாங்கும் தேங்காய்கள்
இடிஇடியாய் இறங்கியது
தலையை இடம்பார்த்து

கண்ணீர் கீழிறங்க தடம்பார்த்தது நமக்கு!

சுத்தம் காப்பதற்கு
வெளியே துறந்தது
அசுத்தம் களைவதற்கு
முள்செருப்பாய் பாதங்களில்

முள்ளாய் நம் இதயங்களில்!

கடவுளை அலங்கரித்து
அழகுபார்க்கும் நம்மை
அவர்மட்டும் அலங்கோலத்தில்
காண விழைவரோ - புரியலையே!?

அழகை தொலைக்கும் வேண்டுதல்கள் வேண்டாமே!!

எழுதியவர் : சு.முத்துக்குமார் (27-Jan-15, 4:58 pm)
பார்வை : 68

மேலே