நட்போடு கலந்து விடு
வாழ்க்கை
என்னோடு இணைத்தது
நட்பு.
தேநீர்
பரிமாறும் போதே
இருவர் தேவைகளும்
பரிசீலிக்கப்படும்.
பிரச்சினைகள்
தரும் வலிகள்
கண்ணீரானால்
மகிழ்ச்சி கொண்ட
சிரிப்பினால்
சிதைக்கப்படும்.
அவள் எனக்கு
மனைவி இல்லை
நான் அவளுக்கு
கணவன் இல்லை
நீண்டு செல்லும்
இல்லறம் முழுவதும்
அன்பினால்
ஆயுள் செய்வோம்.
வா
நண்பர்களாய்
கைகோர்த்து
இணைந்து கொள்வோம்
அடுத்த
தலை முறைகளுடன்.