இளம் விழுதுகளே

பள்ளிக்கு போகச்சொல்லி
கைக்காசு கொடுத்துவிட்டா
கள்ளுக்கு அடிமையாகி
விழுந்துவிட்ட விழுதுகளே ....

ராப்பகளா வேலை பார்த்து
காசு பணம் சேர்த்து வச்சு
அரைவயிறு உண்டவதான்
உன்ன பெத்த மகராசி

சோறு கஞ்சி அவ திண்ணு
கறிக்கொளம்பு செஞ்சுதந்து
பள்ளிக்கு அனுப்பி வப்பா
உனக்காக வாழ்ந்திடுவா

வெள்ளந்தி மனசுடா
மனசுமுழுக்க அன்புடா
உன்ன ஏசும் மனுசனையும்
தூக்கிபோட்டு மிதிப்பவடா

பிஞ்சுளையே நஞ்சுண்டு
குடலெல்லாம் வேகவச்சு
வாழ்க்கையவே அழிச்சுக்கவா
பத்து மாசம் சுமந்து பெத்தா...

வருங்காள தூண்களில
நீயுமொரு தூணாக
நிமிர்ந்து நிற்க வேணுமடா
என் இனிய தமிழ் மக்கா ...

எழுதியவர் : சிவா அலங்காரம் (28-Jan-15, 6:11 pm)
பார்வை : 64

மேலே