நீண்ட தேடல் விடை யில்லாமல்

எழுதப்படாத காதல் சட்டத்தில்
உன் விழிகள் தொடுத்த
வழக்கில்
என் இதயத்தை
பறிமுதல் செய்துகொண்டாய்
அவ்வபோது தந்து விட்டு
எடுத்து சென்று விடுகிறாய்
நடுநிசி கனவுகளில் விளிம்பில்
இதயத்தை
மீண்டும்!!! எப்போது தருவாய் என
நீண்ட தேடலுக்கு விடை யில்லாமல்
தொடர்கிறேன்!!!.....
பாரதி