இணை

உரல்..உலக்கை..
மரம்..இலைகள்..
கதிரவன்..ஒளி..
இரவு..குளிர்ச்சி..
காதல்..புரிதல் .
நீ..நான்..
இரண்டில் ஒன்று
இல்லையேல்
தேவை இல்லாது போகும்
இன்னொன்று!


இமயம்..உயரம்..
கடல்..அலைகள்..
பதவி..பண்பு..
மனிதன்..நேயம்..
அன்பு..கருணை..
இரண்டும் இணைந்து இருந்தால்
அர்த்தம் இருக்கும்
பெயரும் நிலைக்கும் !

எழுதியவர் : கருணா (29-Jan-15, 12:31 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : inai
பார்வை : 130

மேலே